அப்பாவிற்கு என் சம்பாத்தியத்தில் ஒரு அலைபேசி வாங்கணும்னு ஒரு ஆசை.

அது ஏனோ தெரியல, அவருக்கு நான் வாங்கித் தந்த அலைபேசிகள் சரியா அமையல

(1/n)

Reply to this note

Please Login to reply.

Discussion

முதலில் நான் வாங்கிக் கொடுத்தது “Redmi 4” என நினைவு. சில வருடங்கள் நன்கு வேலை செய்தது. பின்னர், battery backup issue & audio issues.

(2/n)

பின்னர், அப்பாவுக்கு ஒரு iPhone-8 வாங்கினேன். அதுவும் கிட்டத்தட்ட 2 வருடங்கள் நன்கு வேலை செய்தது. ஆனால், battery நிற்கவில்லை.

(3/n)

ஒரு நாள் கிழே விழுந்ததில் SIM slot சிக்கல் ஆனது. SIM card தவிர மற்றதெல்லாம் நன்கு வேலை செய்தது. என் செய? அப்பாவிற்கு voice calls தான் அடிப்படைத் தேவை.

(4/n)

எனவே மீண்டும் ஒருமுறை iPhone-7 refurbished வாங்கிக் கொடுத்தேன். அதில் battery குறைவாக இருந்தாலும் சிக்கல் இன்றி வண்டி ஓடுகிறது 😃

(5/n)

அம்மாவிற்கும் ஒரு iPhone (SE) வாங்கிக் கொடுத்தேன். மிக அழகியதொரு கைக்கு அடக்கமான ஒரு அலைபேசி. அவருக்கும் நன்கு அமைந்தது.

(6/n)

அம்மாவிற்கு மனநிறைவான ஒரு அலைபேசி. 😀😀😎

என் மனதுக்கு சிறு நெருடல். அப்பாவுக்கு இன்னும் சிறந்த ஒரு அலைபேசி வாங்கணும் என ஆசை. பார்ப்போம். அது நிறைவேறும் என.

(7/7).