எதாச்சும் உறவுக்கார வீட்டுக்கு நல் நிகழ்வுக்கு வந்தா, நல்லாருக்கீங்களான்னு கேளுங்க & இன்ன பிற கேள்விகள் கூடப் பரவால்ல. இந்த “விசேசம் எதுவும் இல்லையா” அப்டினு கேக்குறத நிறுத்துங்க டா 😡🙏🏿🙏🏿

Reply to this note

Please Login to reply.

Discussion

எதாச்சும் நற்செய்தி இருந்தாச் சொல்ல மாட்டாங்களா? ஏன் டா உசுர வாங்கறீங்க.. 😡😡

“இதெல்லாம் எல்லாரும் கேக்கறது தானே ?” அப்டினு இதை normalise பண்ணாதீங்க. அதும் இளைய தலைமுறையினர் 30-40 இருக்கவங்க கூட இதைக் கேக்குறாங்க. It’s so sick

“மகப்பேறு” - இது இரண்டு பேரின் தனிப்பட்ட விசயம். அதனைக் கேட்பது கூடப் பெரும் தவறு & அநாகரிகம்.

அவன் குழந்தை பெத்துக்கிட்டா நீயா வந்து பாத்துக்கப் போற?

இல்ல முன்ன வந்து நிக்கப் போறியா?

இந்த மாதிரி கேள்வி கேட்கும் போது அந்த இணையருக்கு எவ்வளவு மன உளைச்சல் ஏற்படும் என யாருமே நினைத்துப் பார்க்கவே மாட்டேங்கிறார்கள். அறிவற்ற மக்கள்.

இதில் என்ன இருக்கு? வழக்கமான கேள்வி தானே என்பவர்கள் அந்தப் பெண்ணின் மன நிலையைச் சற்று நினையுங்கள் 🙏🏿