//முகம் மறைத்தோ அகம் திறந்தோ
அரசியல் பேசுவோம் !
சத்தமாய் பேசுவோம் !
ஓட்டு வேட்டைக்காய்
ஓராயிரம் நாடகம் அரங்கேற்றும்
ஒப்பனைக்காரர்களை ஒதுக்கி வைப்போம் ! //
அரசியல் விவாதங்கள் தனிநபர், குடும்பம், பாலினம் ஆகியவற்றின் மீதான தாக்குதலாக மாறும்போது, அது "சமூகத்தை பாதிக்கும் முக்கிய அரசியல் பிரச்சினையிலிருந்து" முற்றிலும் விலகுகிறது.
அரசியல் விவாதங்களை முற்றிலுமாகத் தவிர்ப்பது தனிநபர்களின் நலன்களின் அடிப்படையில் சிறந்த தேர்வாகத் தோன்றலாம் (ஏனெனில், அரசியல் அமைப்பில் உள்ள ஊழல்களால் [திட்டங்களால்] நம்மில் பெரும்பாலோர் நேரடியாக பாதிக்கப்படாமல் இருக்கலாம்)
சமநிலையைப் பேணுவதன் மூலமும், சரியான அரசியல் விவாதக் குழுவை அடையாளம் காண்பதன் மூலமும், எப்பொழுதும் தொடர்புகொள்வதற்கோ அல்லது நமது அரசியல் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதற்கோ ஒரு வழியைக் காணலாம்.
அரசியல் விவாதங்கள் மூலம் தெளிவு பெறவும் சரியான கட்சிக்கு வாக்களிக்கவும் விவாதிக்க வேண்டும்.
நிறைய மக்கள் அதுவும் படித்தவர்கள் அரசியல் பேசாமல் புரிதல் இல்லாமல்(60 வருடத்திற்கு முன்பு இருந்த காலமும் இன்றைய காலமும் சமம் இல்லை, இவ்வளவு வருடம் கூறிய தேர்தல் வாக்ுறுதிகளை எவ்வளவு ஓழுங்காக நிறைவேறியுள்ளது) தவறான கட்சிக்கு அரசியல் வாதிகளுக்கு தொடர்ந்து ஓட்டு போடுவது என்பது நம் எதிர்கால சந்ததியினரை பாதிக்கும் அழிவுப்பாதையை தெரிந்தோ தெரியாமலோ கட்டமைக்கிறோம்.
குறிப்பு: இது ஒரு ஆலோசனையோ அல்லது பரிந்துரையோ அல்லது எதிர்வினை பதிவோ அல்ல.