உலகின் அதிநவீன மனித உருவ ரோபோவான அமெக்கா பூனையை 🐈🐱😻 வரைந்துள்ளது
#Ameca #Draws #Cat #Humanoid
அமெக்கா அவர்களின் திறமைக்கு ஒரு புதிய திறமையை சேர்த்துள்ளது. யூடியூப்பில் இன்ஜினியரேட் ஆர்ட்ஸ் வெளியிட்ட புதிய வீடியோவில், அமேக்கா ஒரு பூனை வரைவதைக் காணலாம்.
youtu.be/L32BRcvnWRU
US House passes debt ceiling bill.
Jim cramer should become a divorce court judge, all the couples would get back together
//முகம் மறைத்தோ அகம் திறந்தோ
அரசியல் பேசுவோம் !
சத்தமாய் பேசுவோம் !
ஓட்டு வேட்டைக்காய்
ஓராயிரம் நாடகம் அரங்கேற்றும்
ஒப்பனைக்காரர்களை ஒதுக்கி வைப்போம் ! //
அரசியல் விவாதங்கள் தனிநபர், குடும்பம், பாலினம் ஆகியவற்றின் மீதான தாக்குதலாக மாறும்போது, அது "சமூகத்தை பாதிக்கும் முக்கிய அரசியல் பிரச்சினையிலிருந்து" முற்றிலும் விலகுகிறது.
அரசியல் விவாதங்களை முற்றிலுமாகத் தவிர்ப்பது தனிநபர்களின் நலன்களின் அடிப்படையில் சிறந்த தேர்வாகத் தோன்றலாம் (ஏனெனில், அரசியல் அமைப்பில் உள்ள ஊழல்களால் [திட்டங்களால்] நம்மில் பெரும்பாலோர் நேரடியாக பாதிக்கப்படாமல் இருக்கலாம்)
சமநிலையைப் பேணுவதன் மூலமும், சரியான அரசியல் விவாதக் குழுவை அடையாளம் காண்பதன் மூலமும், எப்பொழுதும் தொடர்புகொள்வதற்கோ அல்லது நமது அரசியல் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதற்கோ ஒரு வழியைக் காணலாம்.
அரசியல் விவாதங்கள் மூலம் தெளிவு பெறவும் சரியான கட்சிக்கு வாக்களிக்கவும் விவாதிக்க வேண்டும்.
நிறைய மக்கள் அதுவும் படித்தவர்கள் அரசியல் பேசாமல் புரிதல் இல்லாமல்(60 வருடத்திற்கு முன்பு இருந்த காலமும் இன்றைய காலமும் சமம் இல்லை, இவ்வளவு வருடம் கூறிய தேர்தல் வாக்ுறுதிகளை எவ்வளவு ஓழுங்காக நிறைவேறியுள்ளது) தவறான கட்சிக்கு அரசியல் வாதிகளுக்கு தொடர்ந்து ஓட்டு போடுவது என்பது நம் எதிர்கால சந்ததியினரை பாதிக்கும் அழிவுப்பாதையை தெரிந்தோ தெரியாமலோ கட்டமைக்கிறோம்.
குறிப்பு: இது ஒரு ஆலோசனையோ அல்லது பரிந்துரையோ அல்லது எதிர்வினை பதிவோ அல்ல.
Nostr க்கு வரவேற்கிறோம். உங்கள் சேவை மிகவும் தேவை
இழக்க விரும்பாவிட்டாலும்
இழந்து தான் நேரிடுகிறது
சிலரை நம் வாழ்வின்
பயணத்தில் ❤
சிவப்பு மூக்கு ஆள்காட்டி பறவை உருவ அளவில் புறாவை போன்றது. ஆனால், உயரமான மஞ்சள் நிற கால்களைக் கொண்டது. பித்தளைப் பழுப்பு நிற மேற்புறம், வெந்நிற வயிறு மற்றும் தலை, முகம், மார்பு ஆகியவை கருப்பாகவும் இருக்கும். கண்ணுக்கு மேலிருந்து முன்புறமாக அலகு வரை சிவப்பு நிறத்தில் தோல் போன்று தடித்த பாகத்தை உடையது. ஆள்காட்டிகள் திறந்த வெளிகளாக உள்ள கரடு முரடான தரிசு நிலங்களிலும் உழுத நிலங்களிலும் நீர் உள்ள குளம் குட்டைகளின் கரைகளிலும் காணப்படும். இந்தப் பறவைகளின் கூடுகள் உருமறைவானவை. தரையில் தனது கால்களால் பள்ளம் தோண்டி மண் உருண்டைகளைச் சேகரித்துச் சேர்த்து அதனுள் முட்டை வைத்துவிடும். சாதாரணமாகக் காண்பது கடினமான ஒன்று.
மார்ச் முதல் ஜூன் மாதம் வரையிலும் ஆள்காட்டிகள் இனப்பெருக்கம் செய்கின்றன. நான்கு முட்டைகள் இட்டு அடைகாக்கும். முட்டைகள் தரையின் நிறத்திற்கேற்ப ஒன்றி விடுவதால் காண்பது சிரமம்.
இவற்றின் உணவு, மனிதனின் அன்றாட உணவுப் பொருட்களை அழிக்கும் புழு, பூச்சிகள் மற்றும் வெட்டுக்கிளி போன்றவையே. அவற்றை உண்டு மனிதனுக்கு நன்மை பயப்பதோடு, நத்தைகளையும் உணவாகக் கொள்கின்றன. ஆள்காட்டிகள், ஆளை பிறருக்குக் காட்டுவதில் மட்டுமின்றி, ஆளை ஏமாற்றுவதிலும் கை தேர்ந்தவை. முட்டைகளின் மீது ஒரு பறவை அடைகாக்கும்போது மற்றொன்று உயரமான இடத்தில் ஆட்கள் வருவதை மற்றொன்றுக்கு உணர்த்திவிட்டு மெல்ல நகர்ந்து எதிர் திசையில் அழைத்துச் சென்றுவிடும். மேலும் இரு பறவைகளும் சேர்ந்து கூடே இல்லாத இடத்தில் இருப்பது போன்று கத்திக்கத்தி தாக்குதல் நடத்தும். கூடு அன்மையில் உள்ளது போலவே கத்தும். ஆனால் கூடு எதிர் திசையில் இருக்கும். காடுகளில் ஆள்காட்டிகள் சப்தம் கேட்பதே அழகு. நாங்கள் எந்தப் பறவையைத் தேடிப் போனாலும் பார்பதற்கு ஏற்ற சூழல் அமையாமல் போவதற்கு ஆள்காட்டிகளே காரணமாகிவிடும். ஆகையால், காடுகளின் காவல்காரப் பறவைகள் என்றும் ஆள்காட்டிகளைக் குறிப்பிடலாம்.
//Artificial leaf can produce 40 volts of electricity from wind or rain//
இத்தாலியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மழைத்துளிகள் அல்லது காற்றிலிருந்து மின்சாரத்தை உருவாக்க தாவரங்களுக்குள் பதிக்கக்கூடிய செயற்கை இலையை வடிவமைத்துள்ளனர்.
IEEE ஸ்பெக்ட்ரம் வெளியிட்ட அறிக்கையின்படி, எல்.ஈ.டி விளக்குகள் மற்றும் சக்தியை ஒளிரச் செய்வதற்கு இது மழை அல்லது காற்று சூழ்நிலைகளில் மிகவும் சிறப்பாக செயல்படுகிறது.
The chairman of the board of Credit Suisse is called Mr. Lehmann.🥱🥱🤣🤣😜😜😜
We live in a simulation.🤡🤡🤡🤡😂😂😂😂
தத்துவ மேளம் கொட்டாமல்
தியானம் போன்ற வித்தையின்றி
சட்டென்று மனதில் பதியும்
எளிமையான சிந்தனை.
சிலசமயங்களில், மனதில் ரொம்ப
மோசமான எண்ணங்கள் எல்லாம் வரும்.
அதெல்லாம் இல்லப்பான்னு
யாரும் சொல்லமுடியாதுங்க.
ஏன்னே தெரியாது ரொம்ப, ரொம்பக் கேவலமான எண்ணங்கள் கூட வரும். இதனால் மனசுக்குள்ள ஒரு பயமும் வந்திரும்.
அய்யோடா நாம கெட்டவங்களா ஆகிட்டமான்னு கூடத் தோணும்.மனசே சரியில்லாம, குழப்பமாக் கூட இருக்கும்.
இந்த நிலை எல்லோருக்குள்ளும் வந்து போகும்.இதற்காக நாம பயம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லைங்க.
ஏன்னா, மனசின் தன்மையே அப்படித்தான். மனசுக்கு ஓயாம ஏதாவது பேசிகிட்டே இருக்கணும். அதனால தொடர்ந்து சம்மந்தம், சம்பந்தமில்லாமக் கூட எண்ணங்களை கொண்டு வரும்.
நல்லா உணர்ந்து கொள்வோம் உறவுகளே. இது மனதோட இயல்பு. நம்மளோட இயல்பு கிடையாதுன்னு தயவுசெய்து புரிந்து தெளிந்து கொள்வோம்.
அப்ப, மனம் வேற, நம்ம வேறயா.ஆமாங்க ஆமா.மனம் நம்மளோட பேச்சைக்கேட்டா ஞானி, யோகி. மனசோட பேச்சை நாம கேட்டா போனி,போகி,அவ்வளவு தான்.
இந்த ஓயாமல் பேசிக்கிட்ட இருக்கிற மனசுகிட்ட இருந்து தப்பிக்கத்தான் தியானம், பிராணாயமம் போன்ற மூச்சுப்பயிற்சிகள் எல்லாம்.
நாம தெரிந்து கொள்ள வேண்டியது
கெட்ட எண்ணமோ, நல்ல எண்ணமோ எது வந்தாலும் வேடிக்கை பார்க்க வேண்டியது மட்டுமே. (ஒஷோ thoughts)
உதாரணத்திற்கு, உங்கள் தெருவுல நிறைய பேர் போயிக்கிட்டும், வந்துகிட்டும் இருப்பாங்க. நீங்கள் வேடிக்கை மட்டுமே பார்ப்பீர்கள்.அதுபோல தான் மனசுல நிறைய எண்ணம் வரும், போகும்.நாம் வேடிக்கை தான் பார்க்கனும்.
தெருவுல போற ஒருத்தரைக் கூப்பிட்டு என்னப்பான்னு பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தால், அப்புறம் அவர் வீட்டுக்குள்ள வந்திடுவார்.
இதுபோலத் தான் மனதில் தோன்றும் எண்ணங்களை வேடிக்கை பார்க்காமல் அதன்பின்னாலேயே போக ஆரம்பித்தால் கெட்ட எண்ணங்கள் வரும் போது கெட்டவர்களாகவும், நல்ல எண்ணங்கள் வரும் போது நல்லவர்களாகவும் மாறி, மாறி நிற்போம் நாம்.
பிரபஞ்ச தமிழ்.
நெற்றிச்சிறுபொட்டு அளவிலான
வட்டப்பூச்சி ஒன்று
என்னறைக்குள் வந்துவிட்டது.
வெளிச்செடியில்
வாழ்கின்ற எளியை அது.
எப்படியோ தவறி
உள்ளேகிச் சிக்கியது.
வெளியேற முயன்ற
அதன் முயற்சிகள் யாவும்
தோற்றன.
வேறு வழியின்றி
என் புழக்கமுள்ள இடமாகப் பார்த்து
இடைப்பட்டது.
முதலில் கணினித்திரையில்
எழுத்திடை ஊர்ந்தது.
அப்போதுதான் அதனை
முதன்முதலாகக் கண்டேன்.
விரலால் மெல்லத் தீண்டியதும்
விழுந்துவிட்டது.
மீண்டும் என் விரல்மீது
பறந்து வந்து அமர்ந்தது.
கையை அசைத்ததும்
பறந்து அகன்றுவிட்டது.
பிறகு
அதனைக் காணவில்லை.
இந்தப் பூச்சி
காதுக்குள் நுழைந்தால்
என்னாவது என்ற அச்சம்
ஒருநொடி தோன்றி அகன்றதுதான்.
பறக்கும் சிறுபூச்சி
தன்வழி பார்த்துக்கொள்ளுமென்று
மறந்துவிட்டேன்.
கணினி முன்னமர்ந்த மறுநாள்
என் புறங்கையில்
ஏதோ ஊர்வதுபோல் உணர்ந்தேன்.
அதே வட்டப்பூச்சி.
கையில் அமர்ந்தது
ஊர்ந்து நகரவில்லை.
எந்த விரைவையும் காட்டவில்லை.
‘அடடே நீ இன்னும்
இங்கேதான் இருக்கிறாயா ?’ என்றபடி
உற்று நோக்கினேன்.
காற்றில் மிதக்கும் துகள்போலிருந்த
தன் இருகைகளையும் குவித்து
வணங்குவதுபோல்
என்னைப் பார்த்து அமர்ந்திருந்தது.
கலங்கிவிட்டது
என் உயிர்.
“இருமுறை உன் கண்பட்டேன்.
என்னை நீ
ஏதும் செய்யவில்லை.
என்னைக் காப்பாற்றுவாயா ?” என்று
இறைஞ்சுவதுபோல் உணர்ந்தேன்.
”இந்த உலகம்
உன்னைப்போன்ற
சிற்றுயிர்களின் புகலிடம்” என்று
அதனிடம் கூறிக்கொண்டே
கையசைக்காது எழுந்து
வெளிச்சென்று
முற்றச்செடியருகே நின்றேன்.
என் கையிலிருந்து பறந்தோடி
செடியமர்ந்தது.
அச்செடியருகே
இனி நான் எப்போது சென்றாலும்
அதனுடைய
அதன் பிள்ளைகளுடைய
கைகுவித்த வணக்கத்தைக் காண்பேன்.
பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.
Kural 675
பனி விழும் தேசத்தின்
ராணியே
பார்த்ததும் பறக்க வைக்கும் தோற்றத்தின்
பரிணமாமே
பாரினில் வாழ்ந்த
பாதி வாழ் நாட்களில் கண்டிராத
பூக்களின் தலைவியே
🎶🎶நீ ஒரு முள் என்றால் நான் அதில் ரோஜா
அன்பே முள்ளாய் இரு
நீ வீரமான கள்ளன் உள்ளூரும் சொல்லுது
நீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது🎶🎶
பெண்களிடம் ஆண்கள் செய்யும் மிகப்பெரிய தவறு, பெண்கள் அனைவரும் ஒரே மாதிரியாக நினைக்கிறார்கள்/உணர்கிறார்கள் என்று கருதுவது
Women are individuals with unique perspectives,desires, and needs-listen to and respect them as such,rather than making assumptions based on gender stereotypes
ஆன்மீகம், அரசியல், மொழி, பொழுதுபோக்கு பற்றி நாம் ஒரே மாதிரியான எண்ணங்களை கொண்டிருக்க வேண்டியதில்லை😎இந்த புரிதலோடு நாம் ஒன்றாக ஒற்றுமையாக பயணிக்கலாம்❤️💚💛💜💙
